இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், மேல் சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.
இதற்காக டி.ராஜேந்தர் அமெரிக்க செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று(14.6.2022) இரவு விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
டி.ராஜேந்தர் – கமல்ஹாசன் – குரலரசன் இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் டி.ராஜேந்தரை நடிகர் கமல்ஹாசன் இன்று ள்ளார்.
இதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. டி.ராஜேந்தருடன், சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினரும் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.