செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் டிஎன்பிஎல் போட்டியில் அசத்தும் கவுதம் மேனன் மகன்

டிஎன்பிஎல் போட்டியில் அசத்தும் கவுதம் மேனன் மகன்

1 minutes read

திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன்

கவுதம் வாசுதேவ் மேனனின் மகன் ஆர்யா யோஹான். 19 வயதாகும் இவர் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் களம் இறங்கின.

டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆர்யா யோஹான் தனது அணிக்காக முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் விளையாடிய ஜாஃபர் ஜமால் முதல் ஓவரில் 11 ரன்கள் விளாசினார்.

இரண்டாவது ஓவர் வீசிய ஆர்யா யோஹான் தனது முதல் பந்திலேயே ஜமாலின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இப்போட்டியில் மொத்தம் 3 ஓவர்கள் வீசிய ஆர்யா யோஹான் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மற்றும் 1 ரன் அவுட் செய்தார்.

இந்த போட்டியில் நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More