அசாமிய திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வந்தவர் கிஷோர் தாஸ் (வயது 31). இவர் 300-க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களிலும் நடித்து இருக்கிறார்.
கடைசியாக ‘தாதா துமி டஸ்டோ போர்’ என்ற அசாமிய படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதற்காக கவுகாத்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த வருடம் மார்ச் மாதம் சென்னை கொண்டு வரப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிஷோர் தாஸ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கிஷோர் தாஸ் மரணம் அடைந்தார்.