மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் 500 முதல் 600 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த படத்தில் உள்ள கேரக்டருக்கு தகுந்தவாறு மிக பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்தது தான் என்றும் இதனால் மணிரத்னம் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர்களின் காஸ்ட்யூம்கள் மற்றும் நகைகள் மிகப் பெரிய அளவில் பெண்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது தீபாவளியை கலெக்சனாக ’பொன்னியின் செல்வன்’ சேலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேலையில் ’பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கேரக்டர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது என்பதும் ’பொன்னியின் செல்வன் என்ற டைட்டிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.