பாரதி கண்ணம்மா சீரியலின் பிரபல சின்னத்திரை நடிகரான பரத்தின் மனைவி பிரியா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவரது மனைவி பிரியா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மேலும் மோசமானதால் 7 மாதங்களாக கோமா நிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை 5 மணிக்கு பிரியா மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் சோகத்தை பகிர்ந்துள்ளனர்.
பரத் கல்யாண் – பிரியா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பிரியாவின் மறைவு அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.