கேரளாவில் அவதார் 2 வெளியிடுவதில் சிக்கல் நிலை உருவாகி உள்ளதாக பல ஊடகங்கள் மூலமாக அறிய வருகிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் முதலில் உலக புகழ் பெற்ற படம் டைட்டானிக் இன்றும் அனைவரையும் ரசிக்கவைக்கும் படமாக உள்ளநிலையில் அவரின் இயக்கத்தில் உருவாகிய அடுத்த படம் அவதார் 2009 வெளியிடப்பட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்று 2.4 பில்லியன் அமெரிக்க டொலரை வசூலித்த முதல் படமாக உள்ளது. இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு இப்படத்தை 5 பகுதிகளாக எடுக்க உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தததை அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
இப்படி இருக்க 2020 அவதார் 2 படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் 2022 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி படம் 160 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இவை இவ்வாறு இருக்க அந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். தமிழ்,தெலுங்கு விநியோகஸ்தர்கள் பெரிய விலை கொடுக்க தயாராக உள்ள நிலையில் 100-150 கோடி ரூபாய் விலை மதிப்பு கசிந்துள்ளது
இந்தியாவின் கேரளாவில் வழமைக்கு மாறாக வேற்று மொழி படத்துக்கு விநியோகஸ்தர்கள் முதல் 3 வார வசூலில் இருந்து ஒவ்வொரு வாரமும் 60% கேட்டுள்ளனர் . வேற்று மொழி படத்துக்கு எப்போதும் 50-55% திரையரங்கு உரிமையாளர்களால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.