நடிகர் ஜித்தன் ரமேஷ் சிறிய இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘ரூட் நம்பர் 17’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை அவரது சகோதரரும், நடிகருமான ஜீவா தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ரூட் நம்பர் 17’. இதில் ஜித்தன் ரமேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். பிரசாத் பிரணவம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு உசெப்பச்சன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நேனி ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான ஜித்தன் ரமேஷின் வித்தியாசமான தோற்றம், நெடுஞ்சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் ஒரு மரத்துடன் இணைத்து வடிவமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.