செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் ஜித்தன் ரமேஷ் மூன்று கெட்டப்புகளில் தோன்றும் ‘ரூட் நம்பர் 17’

நடிகர் ஜித்தன் ரமேஷ் மூன்று கெட்டப்புகளில் தோன்றும் ‘ரூட் நம்பர் 17’

1 minutes read

நடிகர் ஜித்தன் ரமேஷ் நடிக்கும் புதிய படமாக ரூட் நம்பர் 17 எனும் திரைப்படத்தில் அவர் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றுவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

இயக்குநர் அபிலாஷ் வி தேவன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ரூட் நம்பர் 17. இதில் ஜித்தன் ரமேஷ், புதுமுக நடிகை அஞ்சு பாண்டியா, ஹரீஷ் பராடி, அருவி மதன், அமர் ராமசந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, காசி விஸ்வநாதன், டைடஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படததிற்கு அவுசேப்பச்சன் இசையமைத்திருக்கிறார். அடர்ந்த வனத்தின் பின்னணியில் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த படத்தை நேநி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டொக்டர் அமர் ராமசந்திரன் தயாரித்திருக்கிறார். 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “காட்டோடு சேர்ந்த பாதை என்பதுதான் இந்த படத்தின் தலைப்புக்கான அர்த்தம். முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு பாதை, இப்போது மூடப்பட்டுள்ளது. இந்த பாதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்கள் எல்லாம் அன்றிரவே மரணத்தை தழுவுகிறார்கள். இதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காரணம் ஒன்று இருக்கிறது. 1990 முதல் 2020 வரை மூன்றுவித காலகட்டங்களில் நடக்கும் 30 வருட பழிவாங்கல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. 

அதற்கேற்ப ஜித்தன் ரமேஷும் மூன்று வித கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதை களம் தமிழகம் மற்றும் கர்நாடகா என இரண்டு மாநில எல்லைக்குட்பட்டப் பகுதியில் நிகழ்கிறது. படப்பிடிப்பை கர்நாடக மாநிலம் குண்டல்பேட் மற்றும் தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளோம். ஜனவரியில் இதன் முன்னோட்டத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More