நடிகர் சத்யராஜ் மற்றும் அஜ்மல் கதாநாயகர்களாக நடித்திருக்கும் ‘தீர்க்கதரிசி’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர்கள் பி.ஜி. மோகன் மற்றும் எல்.ஆர். சுந்தரபாண்டி இணைந்து இயக்கும் முதல் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’. இதில் சத்யராஜ், அஜ்மல், பூர்ணிமா பாக்கியராஜ், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, உமா பத்மநாபன், மூணாறு ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெ. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜி. பாலசுப்ரமணியன் இசையமைத்திருக்கிறார்.
ஜோதிடத்தை முன்னிறுத்தி த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் என்னும் பட நிறுவனம் சார்பில் பி. சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் குறு முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்குறு முன்னோட்டத்தில் ‘சென்னை போன்ற மாநகரங்களில் தொடர் கொலைகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக காவல்துறைக்கு ஒருவர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கிறார். இருந்தும் கொலைகள் நடைபெறுகின்றன. பிறகு தகவல் தெரிவிக்கும் நபர் யார் என்பதை முத்தாய்ப்பாக கொண்டிருப்பதால், டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.