தயாரிப்பு: ஹெச்.ஆர். பிக்சர்ஸ்
நடிகர்கள்: ஹிர்து ஹாரூன், அனஸ்வரா ராஜன், ஆர்.கே. சுரேஷ், சிம்ஹா, முனிஸ்காந்த், சரத் அப்பாணி மற்றும் பலர்.
இயக்கம்: பிருந்தா
மதிப்பீடு: 3/5
கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெறும் நாயகன், தன் காதலியின் விருப்பத்துக்காக சிறையிலிருந்து சில நண்பர்களுடன் வெளியேற திட்டமிடுகிறார். அவருடைய திட்டம் வெற்றி பெற்றதா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
2018ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘சுதந்திரமும் அர்த்தராத்திரியில்..’ எனும் அக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிரபல தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் வாரிசான ஹிர்து ஹாரூன் நடித்திருக்கிறார்.
அறிமுக நாயகனான இவரின் நடிப்பும், அக்ஷன் காட்சிகளில் இவரின் துடிப்பும், நடனக் காட்சிகளில் இவரின் வேகமும் எதிர்காலத்தில் சிறந்த நட்சத்திர நடிகராக உயர்வார் என நம்பிக்கை அளிக்கிறார். நாயகியான அனஸ்வர ராஜனின் தோற்றமும் கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சிகளில் லொஜிக் மீறல்கள் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதையும், பரபர அக்ஷன் காட்சிகளும், நேர்த்தியான ஒளிப்பதிவும், அதிரடியான பின்னணியிசையும் ரசிகர்களை உட்கார வைக்கிறது.
‘ஹே சினாமிகா’ எனும் முதல் படத்தில் காதலை வண்ணமயமாக இயக்கிய இயக்குநர் பிருந்தா மாஸ்டர், இந்த படத்தை அக்ஷன் த்ரில்லராக இயக்கியிருக்கிறார். ஆர்.கே. சுரேஷ், சிம்ஹா, முனீஸ்காந்த் ஆகியோரும் தங்களுக்குரிய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ சக்ஸஸ் ஒஃப் பொக்ஸ்