செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நாக சைதன்யா நடிக்கும் ‘கஸ்டடி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

நாக சைதன்யா நடிக்கும் ‘கஸ்டடி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

1 minutes read

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் நாக சைதன்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கஸ்டடி’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா..’ எனத் தொடங்கும் டைம்லெஸ் லவ் பாடலை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

‘மாநாடு’ எனும் மாபெரும் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘கஸ்டடி’.

இந்த திரைப்படத்தில் நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார், சம்பத்ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா என இருவரும் இணைந்து இசைறமைத்திருக்கிறார்கள்.

காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார்.

இந்த திரைப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியிருக்கிறது. ‘ஏ வா காதல் நெஞ்சை சீரோட்ட வா எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியரும், வசனகர்த்தவுமான மகன் கார்க்கி எழுத இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான யுவன் சங்கர் ராஜாவும் பாடகி கபில் கபிலனும் பாடியிருக்கிறார்கள்.

மெல்லிசையாகவும், காதலின் மென்மையும் கலந்து தயாராகி இருக்கும் இந்த பாடல் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த திரைப்படம் மே மாதம் 12ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More