செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா திரிஷாவின் சினிமா பயணம் ஒரு பார்வை

திரிஷாவின் சினிமா பயணம் ஒரு பார்வை

1 minutes read

திரிஷா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குந்தவை இன்று பொன்னியின் செல்வன் நாவல் வாசகரின் மனக்கண்ணில்  அமர பெற்ற குந்தவையாக மாறியுள்ளார். திரிஷா  தனது சினி வாழ்க்கையை தனது 18 வது வயதிலே ஆரம்பித்தார்.1983 ஆம் ஆண்டு மே நான்காம் திகதி கிருஷ்ணன் மற்றும் உமா தம்பதிகளுக்கு சென்னையில் பிறந்தார் .

இவர் எத்திராஜ் கல்லூரியில் பிஷனஸ் அட்மினிஸ்ரேடிங்க படித்தார் (BBA )வீட்டில் விருப்பப்பட்டதை செய்யும் சுதந்திரம் இருந்ததாள் இளம் வயதிலேயே மாடலிங்க் செய்ய தொடங்கினார்.  1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டுமிஸ் சென்னை  பட்டத்தை வென்றார். 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவில் கலந்து மிஸ் ஸ்மைல் என்ற பட்டத்தையும் வென்றார்.

பல விளம்பரங்களில் நடித்த திரிசா இயக்குனர் பிரவின் காந்தி இயக்கத்தில் உருவான ஜோடி திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் தோன்றிய வெள்ளைத்திரைக்கு அறிமுகமானார் பின் இயக்குனர் பிரியதர்சனின் லேசா லேசா திரைப்படத்திலும் நடித்தருந்தனர்.பின் இந்த திரைப்படத்தில் நடித்திருந்த போதே எனக்கு 20 உனக்கு 18 படத்தையும்.நடித்து வந்தார். ரிலீஸ் தள்ளிப்போகாவே 2003 அமீர் படத்தில்  ஒரு பாத்திரம் (சந்தியா) ஏற்று   மௌனம் பேசியது படத்தில் நடித்தார். பின் ஹரியின் இயக்கத்தில் விக்கிரமுடன் இணைந்து சாமி படத்தில் நடித்தார். சாமி box office இல் பெரும் வெற்றிப்பெற்றது .

இதன் பின் தமிழ் ,தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு தினம் வந்தது இந்நிலையில் லேசா லேசா  வெளியாகி தோல்வி அடைந்தது அதனை தொடர்ந்தும் வெளியான எனக்கு 20 உனக்கு 18ம்  தோல்வியை அடைந்தது. எனவே மனஉலைச்சலுக்கு உள்ளான திரிஷாவின் மார்க்கெட்டும் சிறுது சிறிதாக சரிய ஆரம்பித்தது. பின் 2004 ஆம் ஆண்டு பிராபாஸுடன் இணைந்து தெலுங்கில் வர்ஸம்  படம் வெளியானது இது பெரிய வெற்றி அடைந்தது எனவே தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தன ஆனாலும் தமிழ் சினிமாவில் சரிந்து கிடந்த தன்  மார்க்கெட்டை பற்றி பெரும் கவலை கொண்டார்  திரிஷா

அப்போது தான் A .M .ரத்னம்  இயக்கத்தில் விஜயுடன் கில்லிப்பாடத்தில் கதாநாயகியாக நடித்தார் . இதன் பின் சரிந்த மார்க்கெட் நிமிர ஆரம்பித்தது . எனினும் அதன் பின் வந்த படங்கள் சொல்லும் அளவுக்கு இருக்கவில்லை  அப்போது தான் திரிஷா ஒரு தீர்மானத்துக்கு வந்தார் அது தான் படங்களில் நடிப்பதை விட  கண்டனுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என்ற தீர்மானம் அதன் வழியில் தான் படங்களை தெரிவு செய்து நடித்தார் . மங்காத்தா , கொடி ,தூங்காவனம் இப்படி கதாபாத்திரத்துக்கு  முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். 2018 96 படம் மூலம் மாற புகழை பெற்றார். திரிஷாவின் நடிப்பு திறமைக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.  தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் கதாநாயகி குந்தவையாக அனைவரது மனதிலும் அரியணை போட்டுவிட்டார் .

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More