செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கல்லீரல் பிரச்சனையால் நடிகர் மனோ பாலா காலமானார்

கல்லீரல் பிரச்சனையால் நடிகர் மனோ பாலா காலமானார்

1 minutes read

நடிகரும் இயக்குநருமான மனோபாலா கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கபட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

நடிகர் மனோ பாலா காலமானார்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா உடலநலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 69.

1980-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் மனோபாலா. ஆகாய கங்கை படத்தில் ஆரம்பித்து 2002ல் வெளியான நைனா படம் வரை 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார். தன்னுடைய நடிப்பு மூலம் அனைவரையும் ஈர்த்து வந்த மனோபாலா இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல ஸ்வாரஷ்யமான விசயங்களை பகிர்ந்தும் யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களுடன் கலந்துரையாடியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அவரது வீட்டில் காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More