பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லூசி”. ஈழத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியானது.
இதில் அபயன் கணேஷ், பூர்விகா இராசசிங்கம், இதயராஜ், தர்ஷி பிரியா, சுகிர்தன், ஜொனி ஆன்ரன், கௌசி ராஜ், ஆர்.ஜே.நெலு, ஷாஷா ஷெரீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ரெஜி செல்வராசா மேற்கொண்டுள்ளதுடன், பத்மயன் சிவா இசையமைத்துள்ளார். வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உக்கிர முகத்தை ட்ரைலரில் அழுத்தமாக உணர்த்துகிறாள் லூஸி.
மிரட்டலாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ள ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை ஜூன் முதல் வாரத்தில் படத்தினை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் ஈழவாணி அறிவித்துள்ளார்.