நேற்று (22.05.2023) மதியம் 1.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி பிரபல நடிகர் சரத்பாபு அவர்கள் மரணித்தார் இவரது இறுதி கடமை இன்று சென்னையில் நடை பெற்றது. 92 நாட்கள்ட்க்கு மேல் பெங்களூர் வைத்தியசாலையில் பின் ஐதராபாத்தில் AIG வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கல்லீரல் , நுரையீரல் , சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணித்தார்.
இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து இப்போது 50 ஆண்டு நிறைவையும் கண்டுவிட்ட நிலையில் தனது 72 வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார். சினிமா உலகில் மிக உன்னதமான மனிதனாக மதிக்கப்பட்டவரும் 220 படத்துக்கு மேல் நடித்தவரும் ,சின்னத்திரையிலும் தனது பங்கை செலுத்தியவரும் ஆவார்.
K .பாலசந்தரின் பட்டின பிரவேசம் மூலம் அறிமுகமானவர் ஆவார். திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி, சரத்குமார், ராதிகா, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். சரத்பாபு உடன் முள்ளும் மலரும் தொடங்கி வேலைக்காரன், அண்ணாமலை, முத்து வரை பல படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பேசிய ரஜினி, ‛‛என் மேல் அளவு கடந்த அன்பு கொண்டவர். சிகரெட் பிடிப்பதை பார்த்து வருத்தப்படுவார். சிகரெட்டை நிறுத்து, உடம்பை தேத்து நீ ரொம்ப நாள் வாழணும் என்பார். நான் சிகரெட் பிடித்தால் கூட அதை பிடுங்கி அணைத்து தூக்கி போட்டு விடுவார். அவர் முன்னால் நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். அண்ணாமலை படத்தில் வரும் சவால் டயலாக் சரியாக வரவில்லை.
10-15 டேக் போனது. அப்போது படப்பிடிப்பில் ஒரு சிகரெட் கொண்டு வர சொல்லி எனக்கு கொடுத்தார். அதன்பின் தான் அந்த டேக் ஓகே ஆனது. அவரின் அன்புக்காக இதை இங்கு சொல்கிறேன். என்னை உடம்பு பார்த்துக்கோ என சொல்லியவர் இப்போது அவர் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது. ரொம்ப நல்ல மனிதர். அவரின் ஆத்மா சாந்தி அடையணும்” என்றார்.
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார்.
அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி என்று