தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் இணையும் புதிய நடிகர் .’லியோ’ படத்தில் ஏற்கனவே விஜய்யுடன் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், த்ரிஷா, பிரியாமணி, உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் மட்டுமின்றி பான் – இந்திய படமாகவும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டர் போல் ஒரு கேரக்டரில் .ராம்சரண் தேஜா நடித்து வருவதாகவும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை சற்று முன் பார்த்தோம்