விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்டது.
இதன் பிறகு சமீபத்தில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் நடந்து வந்தது. தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
மேலும் நாளை இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அனேகமாக ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நீண்ட காலமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் ரசிகர்களுக்கு நாளை கிடைக்கப்போகும் தகவல் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது
விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.