‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மகாராஜா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
சிகை அலங்கார நிபுணரான ‘மகாராஜா’ தன் முடி திருத்தும் நிலையத்திலிருந்து லட்சுமி காணவில்லை என காவல்துறையில் புகார் தருகிறார்.
இந்தக் காட்சி மகாராஜா படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருப்பதாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதாலும்.. இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
‘குரங்கு பொம்மை’ எனும் கவனம் ஈர்த்த படைப்பை உருவாக்கிய இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மகாராஜா’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பொலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ், நட்டி என்கிற நட்ராஜ், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, அபிராமி, சிங்கம் புலி, அருள்தாஸ், முனீஸ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஃபெசன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஐம்பதாவது திரைப்படம் இது என்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் சிகை அலங்கார நிபுணராக நடித்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பும், வசனமும் அவருக்கே உரிய தனித்துவத்தை பிரத்யேகமாக பிரதிபலிப்பதால் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது.