செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

1 minutes read

‘கல்கி 2898 கிபி’ படத்தின் மூலம் மீண்டும் வசூல் சக்கரவர்த்தி என நிரூபித்த ‘ரபெல் ஸ்டார்’ பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளி வெளியிடப்பட்ட குறுகிய கால அவகாசத்திற்குள் பதினைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

 

தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், மாளவிகா மோகனன், ரீதி குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ரொமான்டிக் ஹாரர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வபிரசாத் தயாரிக்கிறார்.‌

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படத்தை தயாரிப்பதிலும், அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவதிலும் , படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்ற தகவலை வெளியிடுவதிலும், படத்தின் வெளியீட்டு திகதியை முன்னரே திட்டமிட்டு தீர்மானித்து அறிவிப்பதிலும் தெலுங்கு திரையுலகம் இந்திய திரையுலகத்திற்கு முன்னோடியாக இருக்கிறது என்பதற்கு இந்த திரைப்படமும் ஒரு சாட்சி என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றியை பெற்றதால், அவரின் நடிப்பில் தயாராகும் ‘தி ராஜா சாப்’ படத்திற்கும் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.‌

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More