தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் இம்மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் வெளியான ‘புஷ்பா 2 – தி ரூல்’ எனும் திரைப்படம்- முதல் நாள் வசூலில் .. இந்திய சினிமா வரலாற்றில் புதிய சரித்திரத்தை எழுதி இருக்கிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான ‘புஷ்பா 2 – தி ரூல்’ எனும் திரைப்படம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியானது. வெளியீட்டிற்கு முன் படத்தின் தரம் குறித்து படக்குழுவினர் வாக்குறுதி அளித்தனர்.
இதனால் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை காண வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட மாளிகைக்கு திரண்டனர். தயாரிப்பு நிறுவனமும், திரையுலக வணிகர்களும் அவதானித்த கூட்டத்தை விட, ரசிகர்கள் அதிகளவில் வருகை தந்ததால் முதல் நாள் வசூலும் அதிகரிக்கும் என நினைத்தனர்.
இறுதியில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தானா பகத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா 2 முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 294 கோடி ரூபாய் வசூலித்து இந்திய சினிமாவில் இதுவரை எந்த திரைப்படமும் நிகழ்த்தாத புதிய சாதனையை படைத்தது.
இதனால் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகமே புஷ்பா 2 படக்குழுவினரை பா