செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் அப்புகுட்டி நடிக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் அப்புகுட்டி நடிக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

1 minutes read

சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கான லாபகரமான நடிகராக திகழும் அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் ‘ பிறந்தநாள் வாழ்த்துக்கள் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ராஜு சந்திரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ பிறந்தநாள் வாழ்த்துக்கள் ‘ எனும் திரைப்படத்தில் அப்புகுட்டி, ஸ்ரீஜா ரவி, ஐஸ்வர்யா அனில் குமார், சந்தோஷ் சுவாமிநாதன் , ஈஸ்வரி , நீலா கருணாகரன், சுல்பியா, மஜீத் , இன்பரசு, பக்தவல்சலன், அமித் மாதவன் ,  விபின் தேவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜு சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி,  நவநீத் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஃபேண்டஸி டிராமா ஜேனரிலான இந்த திரைப்படத்தை பிளான் 3 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் ராஜு சந்திரா தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கிராமத்துப் பின்னணியில் இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்தினை விவரித்திருக்கிறோம். இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளை பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் ” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More