தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஜீவா, அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் ‘அகத்தியா’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செம்மண்ணு தான எங்க சாமி..’ எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
பாடலாசிரியர்,இயக்குநர், நடிகர், என பன்முக ஆளுமை திறனுடன் திகழும் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகத்தியா’ எனும் திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராதா ரவி, எட்வர்ட் சொனன்பிளாக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வாமிந்தியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் அனீஸ் அர்ஜுன் தேவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘செம்மண்ணு தான எங்க சாமி..’ என தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிவிகல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் பா . விஜய் எழுத , பின்னணி பாடகி எம். எம். மானசி பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் தமிழர்களின் வாழ்வியலும், சித்த மருத்துவத்தின் உன்னதமும் இனிமையான இசையின் பின்னணியில் விவரிக்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.