பான் இந்திய நட்சத்திர நடிகரான மாதவன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டெஸ்ட்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் எஸ். சசிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விராஜ் சிங் கோஹில் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார்.
துடுப்பாட்ட வீரரின் வாழ்வியலை நுட்பமாக விவரித்திருக்கும் இப்படத்தை வை நொட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதி அன்று நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைபெற்ற பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நடிகை மீரா ஜாஸ்மின், இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன், இயக்குநர் சசிகாந்த் ஆகியோர் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் நடிகர் சித்தார்த் பேசுகையில், ”இந்தத் திரைப்படத்தில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் துடுப்பாட்ட வீரராக நடித்திருக்கிறேன். இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ராகுல் டிராவிட்டின் மைதான செயல்பாடு எனக்கு பிடிக்கும். அதனால் இந்த கதாபாத்திரத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன்” என்றார்.