அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வணங்கான் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து க்ரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில் ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத் திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இத் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.
திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், புதிய அப்டேட் ஒன்றை அருண் விஜய் பகிர்ந்துள்ளார்.
அதில் பெரிய ‘ஆச்சரியமான விஷயம் இப் படத்தில் உள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.