சந்தானம் நடிக்கும் கொமடி ஹொரர் ஜோனரிலான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் டி டி நெக்ஸ்ட் லெவல்’ எனும் திரைப்படத்தில் சந்தானம், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், கீதிகா, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். கொமடி ஹொரர் ஜோனரிலான இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதிலுமுள்ளதிரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே நடிகர் சந்தானம் நடித்திருக்கும் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூன்று பாகமும் வெளியாகி வசூல் ரீதியாக பாரிய வெற்றியை பெற்றதால், இந்த நான்காம் பாகத்திற்கும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.