அருண் விஜய் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்து வரும் ரெட்ட தல படத்துக்காக நடிகரும் பின்னணி பாடகரும், இயக்குநருமான தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
க்ரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகிவரும் ரெட்ட தல திரைப்படத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, யோகேஷ் சாமி, ஜோன் விஜய், முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெயினராக தயாராகிவரும் இந்த திரைப்படத்தை பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் பொபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
இப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் பாடியிருக்கிறார்.
இப் பாடலுக்கான படப்பிடிப்பு வெளிநாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.