ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை படமாக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தற்போது நடிகர் தனுஷை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.
சரித்திர கதை பாணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப் படம் உருவாகவுள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப் படத்துக்கு தற்காலிகமாக ‘D56’எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி அண்மையில் இது தான் எனது கனவுப் படம் என்றும் மாரி செல்வராஜ் கூறியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ஏற்கனவே தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இத் திரைப்படமும் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், இந்தப் புதிய திரைப்படம் எப்படி அமையும் என்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.