‘ தக்ஸ் ‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ மைனே பியார் கியா’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஃபைசல் இயக்கும் ‘மைனே பியார் கியா’ எனும் திரைப்படத்தில் ஹிர்து ஹாரூன், பிரீத்தி முகுந்தன், அஸ்கர் அலி ,மிதுன், அர்ஜு , ஜெகதீஷ் , முஸ்தபா, ஜெரா , ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் வெட்டியார், ரெடின் கிங்ஸ்லி, பாபின் பெரும்பில்லி, திரி கண்ணன், மைம் கோபி, குத்து சண்டை வீரர் தீனா, ஜனார்த்தனன் , ஜெகதீஷ், ஜீ. வி. ரெக்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். டான் பால். பி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எலக்ட்ரானிக் கிளி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனும், கதையின் நாயகியும் மணக்கோலத்தில் தோன்றுவதுடன் கையில் ஆயுதம் ஒன்றையும் வைத்திருப்பது இளம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.