போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ‘குட்பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகர் டொம் சாக்கோ கைது செய்யப்பட்டார்.
கொச்சியில் உள்ள விடுதியொன்றில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் திடீர் சோதனையில் ஈடுபட்ட நிலையில், சோதனையின்போது பொலிஸாரைக் கண்டதும் முகத்தை மூடிக் கொண்டு நடிகர் சாக்கோ தப்பியோடினார்.
நடிகர் சாக்கோ தப்பியோடிய காட்சி சிசிடிவியில் பதிவான நிலையில் எர்ணாகுளம் பொலிஸ் அவரைத் தேடி வந்தது.
இந்நிலையில், இன்று பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான நடிகர் டொம் சாக்கோவை, பொலிஸார் கைது செய்தனர்.