உங்கள் சுவையை தூண்டும் வாய்ப்பன் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வாய்ப்பன் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
கோதுமை மாவு – 2 கப்
நன்கு பழுத்த வாழைப்பழம் – 2 (பெரியது)
சீனி – அரை கப்
பேக்கிங் பவுடர் – கால் தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு
உணவு செய்முறை : வாய்ப்பன்
Step 1.முதலில் கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் சீனி சேர்த்து கலந்து வைக்கவேண்டும். பின்னர் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.
Step 2.மசித்த வாழைப்பழத்தை கோதுமை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவேண்டும்.
Step 3.பின்னர் சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசையவும். இப்பொழுது வாணலியில் எண்ணெயைக் கொதிக்கவிடவும். கையைத் தண்ணீரில் நனைத்துக் கொண்டு, பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
Step 4.பின்னர் அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான வாய்ப்பன் தயார்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW