என்னென்ன தேவை?
சிக்கன் லெக் பீஸ் பெரியது – 4,
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்,
மோர் – 2 டம்ளர்,
முட்டை – 1,
பால் – 4 டீஸ்பூன்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
மைதா – 1/2 கப்,
கார்ன்ஃப்ளேக்ஸ் – 2 கைப்பிடி,
மிளகுத்தூள்,
ஓரிகானோ,
மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – தலா 1/2 டீஸ்பூன்,
சில்லி ப்ளேக்ஸ் – 1/4 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்,
உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் மோர், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிக்கன் சேர்த்து கலந்து 3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டை, பால், வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, கார்ன்ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், ஓரிகா னோ, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
மோரில் ஊறிய சிக்கனை எடுத்து முட்டை கலவையில் நனைத்து மைதா கலவையில் பிரட்டி மீண்டும் முட்டை மற்றும் மைதா கலவையில் பிரட்டி கொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கனையும் இருமுறை பிரட்டி வைத்து கொள்ளவும்.
கடாயில் பொரிக்க எண்ணெயை சூடாக்கி மிதமான சூட்டில் வைத்து சிக்கனை தனித்தனியே பொரித்தெடுக்கவும். அப்பொழுதுதான் சிக்கன் உள் பக்கம் வரை வேகும். டொமேட்டோ கெட்சப், மையோ னைஸ் கொண்டு சூடாக பரிமாறவும்.