தேவையான பொருட்கள்:-
பேபிகார்ன் – 250 கிராம்
மைதா – ¼ கப்
சோளமாவு – ¼ கப்
உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
எண்ணெய் (அ) நெய் – தேவைக்கேற்ப
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
வெங்காயம் – 2 (க்யூபாக வெட்டி வைக்கவும்)
குடைமிளகாய் – 1 (க்யூபாக வெட்டி வைக்கவும்)
காஷ்மீரி சில்லி பவுடர் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
எள் – ½ டீஸ்பூன். மேலே அலங்கரிக்க
வினிகர் – 1 டீஸ்பூன்
தேன் (அ) சர்க்கரை – 2 டீஸ்பூன்
சோளமாவு – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்
மல்லித்தழை – மேலே அலங்கரிக்க.
செய்முறை:-
முதலில் பேபிகார்னை நீளவாக்கில் நான்காக வெட்டிக் கொள்ளவும். பின் அதை தண்ணீரில் 2 நிமிடம் வேகவைத்து எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிது உப்பு, சோளமாவு, மைதாமாவு, சில்லி பவுடர், பெப்பர் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றை கலந்து, உடனே பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு , வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் அதில் சில்லி சாஸ், தக்காளி சாஸ், வினிகர் போட்டு கலக்கவும். பின் சோளமாவு, தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துள்ள கலவையை அதில் சேர்த்து கலக்கவும். பின்னர் வறுத்து எடுத்துவைத்துள்ள பேபிகார்னையும், சர்க்கரை (அ) தேன் சேர்த்து கிளறி, எள் தூவி, அதன் மேல் வெங்காயத்தாள் (அ) மல்லித்தழை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
நன்றி :-தினகரன்