என்னென்ன தேவை?
எலும்பு நீக்கிய சிக்கன் – 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 200 கிராம்,
தக்காளி – 2,
பச்சைமிளகாய் – 5,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 5,
மிளகாய்த்தூள்- 20 கிராம்,
தனியாத்தூள்- 30 கிராம்,
சீரகத்தூள்- 20 கிராம்,
மிளகுத்தூள்- 10 கிராம்,
பட்டை – 1 துண்டு,
கிராம்பு – 6,
ஏலக்காய் – 3,
சோம்பு – 20 கிராம்,
இட்லி பொடி – 20 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 150 மி.லி.,
நெய் – 50 மி.லி.,
உப்பு,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
சிக்கன், சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், சிக்கன், கறிவேப்பிலை போட்டு கிளறவும். சிக்கன் வெள்ளை நிறத்திற்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி, சிறிது தண்ணீர், தக்காளி சேர்த்து கிளறவும். சிக்கன் நன்றாக வெந்து வறுவலாக ஆனதும் கடைசியாக இட்லி பொடி, நெய், கொத்தமல்லித்தழையை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
நன்றி:-தினகரன்