தேவையான பொருட்கள்
ஆட்டிறைச்சி – 100 கிராம்,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது – 20 கிராம்,
எண்ணெய் – 50 கிராம்,
பெரிய வெங்காயம் – 50 கிராம்,
கரம் மசாலா – 5 கிராம்,
நெய் – 10 கிராம்,
மிளகாய்த்தூள் – 5 கிராம்,
மிளகுத்தூள் – 5 கிராம்,
மஞ்சள் தூள் – 2 கிராம்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
வரமிளகாய் – 4.
செய்முறை
கடாயில் எண்ணை சேர்த்து இரண்டு வெங்கயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வரமிளகாய், மிளகுத்தூள் சேர்த்து வதக்கி பிறகு மட்டனை குக்கரில் நன்றாக வேகவிடவும். மட்டன் வெந்தவுடன் அதன் சூப்பினை தனியாக எடுக்கவும். கடாயில் மட்டன் சூப்பினை மட்டும் சேர்த்து கொதிக்கவிடவும். அது கெட்டியாக வரும் போது, அதில் வேகவைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சூப், மட்டனுடன் சேர்ந்து நன்றாக சுக்காவாக வந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.
நன்றி-தினகரன்