என்னென்ன தேவை?
நறுக்கிய பலாப்பழத் துண்டுகள் – 1 கப்,
நறுக்கிய பேரீச்சம்பழம் – 2 டேபிள்ஸ்பூன்,
பன்னீர் திராட்சை
அல்லது விதையற்ற பச்சை திராட்சை – 10,
மலை வாழைப்பழம் – 1,
நறுக்கிய ஆப்பிள் – 3 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய ஆரஞ்சு துண்டுகள் – 3 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 1 கப்,
ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தவாவில் சர்க்கரை, 1/2 கப் தண்ணீர், ஏலப்பொடி சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பிப்பதம் வந்ததும் இறக்கவும்.
பிறகு அதில் அனைத்து பழங்களையும் சேர்த்து கலந்து அப்படியே அல்லது குளிரவைத்து பரிமாறவும்.
நன்றி -தினகரன்