தேவையான பொருட்கள்
பேபிகார்ன் – (நீளவாட்டில் நறுக்கியது) 100 கிராம்,
மைதா – 5 டீஸ்பூன்,
கார்ன் பிளவர் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 500 மி.லி.,
ஆரஞ்சு கலர் பவுடர் – 1/4 டீஸ்பூன்,
முட்டை – 1/2.
செய்முறை
பேபிகார்ன் உடன் மைதா, கார்ன்பிளவர், அரிசி மாவு, முட்டை, கலர் பவுடர், உப்பு அனைத்தையும் சேர்த்து பிசைந்து சற்று நீர் விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கொதித்த பின்பு பேபிகார்னை ஒவ்வொரு துண்டுகளாக எண்ணெயில் போடவும். பின்பு இறக்கியதும் மொறு மொறுவென ஆகியவுடன் எடுத்து பரிமாறவும். உடன் தக்காளி சாஸ் போன்றவற்றுடன் சாப்பிட சிறந்தது.
நன்றி -தினகரன்