தேவையானவை:
கோவைக்காய் -2 கப்
உப்பு- தேவையான அளவு
கோவைக்காய் பொரியல்
வறுத்து திரிக்க:
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
தனியா- 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- சிறிதளவு
மிளகாய்வற்றல்- 2 தேக்கரண்டி
தோல் நீக்கிய நிலக்கடலை- 1 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
சீரகம்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- சிறிதளவு
கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
கோவைக்காயை அலம்பி நீளமாகவோ வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டுக் கோவைக்காயையும் சிறிது நீர் விட்டு உப்பைச் சேர்க்கவும். காய் வெந்ததும் திரித்தத் தூளைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
நன்றி-தினகரன்