செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சூப்பரான மிளகு பூண்டு குழம்பு!

சூப்பரான மிளகு பூண்டு குழம்பு!

1 minutes read

தேவையான பொருட்கள்:
மிளகு – 4 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
பூண்டு – 20 பல்
சின்ன வெங்காயம் – 10
தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சையளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சின்னவெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும். மிளகு, சீரகம், மல்லி ஆகியவற்றை தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ள வேண்டும். தேங்காய் வறுக்க மட்டும் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களை ஆற வைத்து அரைத்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். 5 நிமிடம் வதங்கியபின் புளிக்கரைசல், தேவையான உப்பு போட்டு அரைத்தவற்றையும் போட்டு நன்கு கலக்க வேண்டும். 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி மிதமாக அடுப்பை எரிய விடவேண்டும். கால் மணி நேரம் கழித்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது இறக்க வேண்டும். வத்த குழம்பு போல் பதத்தில் குழம்பு கெட்டியாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் சுவை அதிகமாக இருக்கும்.

நன்றி-தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More