தேவையான பொருட்கள்:
ஸ்பூன்எண்ணெய்
பிரிஞ்சி இலை
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 6 பல்
வெங்காயம்
தக்காளி 1 – பொடியாக நறுக்கியது
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்
தனியாத் தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
ஸ்பூன்மிளகு தூள் – ஒன்னரை
கொத்தமல்லி
கறிவேப்பிலை
2வேகவைத்த முட்டை
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் வேக வைத்த முட்டையை இரண்டாக கட் செய்து கொள்ள வேண்டும் பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கட் செய்த முட்டையை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலில் பிரிஞ்சி இலை பச்சை மிளகாய் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும் பின்னர் இஞ்சி பூண்டை தட்டி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு தக்காளி சேர்த்து உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா மிளகு தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் ரெடி செய்து வைத்த முட்டையை சேர்த்து மசாலா முட்டையுடன் சேரும் வரை மிதமான தீயில் வைத்து முட்டை உடையாமல் ஐந்து நிமிடம் கிளற வேண்டும் சுவையான முட்டை மிளகு தொக்கு ரெடி.
நன்றி-மாலை மலர்