தேவையானவை:
அரிசி – ஒரு கப்,
தண்ணீர் – 3 கப்,
வெள்ளைக் கொண்டைக்கடலை – கால் கப்,
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1 அல்லது 2,
கடுகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 6,
கறிவேப்பிலை – சிறிது,
கடலைப்பருப்பு – சிறிது,
வறுத்த முந்திரி துண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முந்தைய நாள் இரவே கொண்டைக்கடலையை ஊறவைத்து மறுநாள் வேகவைக்கவும். அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் சீரகம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாயை சேர்க்கவும். வேக வைத்துள்ள கொண்டக்கடலை, வறுத்து அரைத்த பொடி, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு, தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஆற வைத்துள்ள சாதத்தின் மீது கொட்டி நன்றாகக் கலந்து பரிமாறவும்.
நன்றி-தினகரன்