தேவையான பொருட்கள் :
பன்னீர் – 250 கிராம்,
வெங்காயம் – 3,
பச்சைமிளகாய் – 2,
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு,
மிளகுத்தூள் – 1½ டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்,
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன், க
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – தேவையான அளவு.
செய்முறை :
பன்னீரை சதுர துண்டுகளாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் போட்டு 30 நிமிடம் ஊறவைத்து எடுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது மசாலா வாசனை போனவுடன் மிளகு தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக பச்சைவாசனை போகும்வரை வதக்கவும். பிறகு சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வந்ததும் பன்னீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கறிவேப்பிலை சேர்த்து வறுவலாக வரும்வரை கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
நன்றி-தினகரன்