0
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 10
வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவு
வேர்க்கடலை – 2 தேக்கரண்டி
எள்ளு -1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
செய்முறை
- வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.
- வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
- மிளகாய் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
- சுவையான மிளகாய் சப்ஜி தயார்
சமையல் நேரம்