பிரிஞ்சு இலை: பிரிஞ்சி அல்லது பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் தான் இந்த பிரிஞ்சு இலை.
இந்த இலையை நெருப்பில் எரித்தால் கிளம்பும் புகையை, பல்லி இருக்கும் இடங்களில் பரவ விடுங்கள்.
பிறகு பல்லிகள் நடமாட்டம் அப்பகுதியில் இருக்காது.
கோழி முட்டை ஓடு: உடையாத கோழி முட்டை ஓடு இருந்தால், அதனை பல்லி சுற்றும் இடங்களில் ஆணி அடித்து அதன் மேல் முட்டை ஓட்டை வையுங்கள்.
நம் வீட்டில் கோழி வளர்ப்பதாக நினைத்து பல்லிகள் உள்ளே வராது. அது பல்லிக்கு அச்சமூட்டும் ஒரு பொருள்.
வெங்காயம்: வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த துண்டை, பல்லி உலாவும் இடங்களில் வைத்துவிடுங்கள். அப்போது, பல்லியின் தொந்தரவு குறையும்.
மேலும், வெங்காய சாற்றை அப்பகுதியில் தெளித்தாலும் பல்லி வராது.
பூண்டு: பூண்டு பற்கள் பல்லிக்கு ஆகாவே ஆகாத பொருட்களில் ஒன்று.
எனவே அவற்றை பல்லி எப்போதும் திரியும் இடங்களில் வைத்து விட்டால், அந்த இடத்தில் இருந்து பல்லி காணாமல் போய்விடும்.