குழந்தைகளுக்கு ரசகுல்லா என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வகையில் இன்று தித்திப்பான ரசகுல்லா புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரசகுல்லா – 10 ரசகுல்லா சிரப் – 4 டேபிள் ஸ்பூன்
பால் – ½ லிட்டர்
கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
ரோஜா பன்னீர் – 1 டீஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
நான்-ஸ்டிக் பாத்திரத்தில் பாதியளவு பாலை ஊற்றவும். பால் சிறிது குறையும் வரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை போட்டு, எடுத்துவைத்திருந்த பாதி அளவு காய்ச்சாத பாலை ஊற்றி, கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
இந்தக் கலவையைக் கொதிக்க வைத்த பாலில் ஊற்றி, ரசகுல்லா சிரப் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கட்டிகள் உருவாகாமல் இருக்க தொடர்ந்து கிளறி, மீண்டும் குறைவான தீயில் அடுப்பில் வைத்துக் கிளறவும்.
ரசகுல்லாவை மென்மையாகப் பிழிந்து பாதியாக நறுக்கி தனியாக வைக்கவும்.
அடுப்பில் இருக்கும் கலவை கெட்டியானதும், அதில் நறுக்கிய ரசகுல்லா மற்றும் ரோஜா பன்னீரை சேர்க்கவும். மெதுவாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.
இதை 2 மணி நேரம் குளிரூட்டவும்.
பரிமாறும்போது நறுக்கிய பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும். குளிரவைத்து பரிமாறவும்!
நன்றி | மாலை மலர்