அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், குழந்தைகள் விரும்பி உண்பது சிக்கன். சிக்கனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். அதிலும் இந்த ஸ்டியூ சிக்கன் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி உண்பர். இதனை பிராய்லர் சிக்கன் பயன்ப்படுத்தி செய்யாமல் நாட்டுக் கோழியில் செய்தால் இதன் சுவை
தேவையான பொருட்கள் :
எலும்புடன் உள்ள சிக்கன் – 250 கிராம் உருளைக்கிழங்கு – 1 காரட் – 1 பச்சை மிளகாய் – 2 வெங்காயம் – 2 இஞ்சி பூண்டு விழுது தேங்காய் துருவல் – கால் மூடி மஞ்சள் தூள் 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் வாங்கி வைத்துள்ள கறியும், எலும்புகளையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் இஞ்சி – பூண்டு, தேங்காய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள கறியை கொட்டி மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
கறி வெந்தவுடன், உருளைக்கிழங்கு, காரட், உப்பு வெங்காயம் சேர்த்து மீண்டும் வேக விடவும். நன்கு வெந்தவுடன் தேங்காய் துருவல் கொட்டி கிளறி பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
நன்றி சமையல் நேரம்