செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சத்தான ஸ்நாக்ஸ் ராகி பக்கோடா

சத்தான ஸ்நாக்ஸ் ராகி பக்கோடா

1 minutes read

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 1 கப்

வெங்காயம் – 1

பொட்டுக்கடலை மாவு – 2 தேக்கரண்டி

ப. மிளகாய் – 3

பெருங்காயம் தூள் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

  • ப.மிளகாய், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார்.
  • இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More