மைதா மா – ஒரு கப்
சீனி – 1 1/2 கப்
நெய் – ஒரு கப்
முந்திரி – 15
இனிப்பில்லாத கோவா – ஒரு மேசைக்கரண்டி
கலர் பவுடர் – 2 சிட்டிகை
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து எடுத்து, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் மேலும் ஒரு கப் நெய் ஊற்றி மைதாவை போட்டு மாவின் நிறம் லேசாக மாறும் வரை கிளறி இறக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் சீனியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்து பாகு ஒரு கம்பி பதத்திற்கு வந்ததும் இறக்கி விடவும்.
பாகு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து கீழே இறக்கி வைத்து வறுத்து வைத்திருக்கும் மைதாவை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். அதனுடன் பொடித்து வைத்திருக்கும் முந்திரி, கோவா மற்றும் கலர் பவுடரை கரைத்து ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் கெட்டியாகி வரும் வரை கிளறவும்.
கலவை கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி அடி சமமான மூடி அல்லது கிண்ணத்தை வைத்து மேலே சமப்படுத்தி விடவும்.
5 நிமிடம் கழித்து கத்தியில் நெய் தடவிக் கொண்டு விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும்.
10 நிமிடம் கழித்து பர்ஃபி செட்டானதும் துண்டுகளை எடுக்கவும்.