51
1 1/2 கி.கிராம் தூள் கிடைக்கும்
தேவையான பொருட்கள்
- செத்தல் மிளகாய் – 500 கிராம்
- மல்லி – 400 – 500 கிராம்
- பெருஞ்சீரகம் – 100 கிராம்
- மிளகு – 50 கிராம்
- சிறிதாக வெட்டிய மஞ்சள் – 25 கிராம்
- கடுகு – 1 மே. க. ( நிரப்பி )
- வெந்தயம் – 1 மே. க . ( நிரப்பி )
- நற்சீரகம் – 2 மே . க ( நிரப்பி )
- இறைச்சி சரக்கு – 2 பக்கட் ( சிறியது )
- கறிவேப்பிலை – 10 நெட்டு
செய்முறை :-
- மிளாகாய் , மல்லி , பெருஞ்சீரகம் ஆகியவற்றை துப்பரவு செய்து தனி தனியாக கழுவி காய வைத்து எடுத்துக் கொள்க .
- மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கையால் நன்கு கசக்கி கொண்டபின் , மிளகாய் விதைகள் வேறாகவும் , மிளகாய் தோல் வேறாகவும் பிரித்து எடுத்துக் கொள்க . ( விதைகளை வேறாக எடுக்கா விடல் வறுக்கும்போது கருகிவிடும் )
- பின்பு தாச்சியை அடுப்பில் வைத்து சூடானதும் மல்லியை இட்டு வறுக்கவும் . மல்லி சரியாக வறுக்கபட்டிருப்பின் விரல்களின் இடையே வைத்து நசுக்கி பார்க்கும் போது தூளாக உதிரும் பருவத்தில் மல்லியை எடுத்துக் கொள்க .மீண்டும் தாய்ச்சியில் பெருஞ்சீரகத்தை போட்டு வறுத்து , விரல்கள் இடையே வைத்து நசிக்கும் போது உதிரும் பருவத்தில் எடுத்துக் கொள்க .
- மீண்டும் தாய்ச்சியில் நற்சீரகம் , மிளகு , வெந்தயம் , கடுகு , இறைச்சி சரக்கு , மஞ்சள் . கச்சான் முத்து , கறிவேப்பிலை என்பவற்றை போட்டு வறுத்துக் கறிவேப்பிலை முறுகிய பதத்தில் எடுத்துக் கொள்க
- இவ் வண்ணமே மிளகாய் விதைகளைத் தனியாக பொன் நிறமாக வறுத்தெடுத்துக் கொள்க . மிளகாய்த் தோலை தனியாக நன்றாக சூடாகும்வரை வறுத்தெடுத்து கொள்க .
- பின்பு வறுத்த மல்லி , பெருஞ்சீரகம் , மிளகு , வெந்தயம் , கடுகு , இறைச்சி சரக்கு , மஞ்சள் , கச்சான் முத்து , கறிவேப்பிலை , மிளகாய் விதை , மிளகாய் தோல் என்பவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து திரித்தெடுத்து நன்றாக ஆற வைத்து அரித்தெடுத்துக் கொள்க .
- காற்று புகாத ஜாடியில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம் .
குறிப்பு :-
விரும்பினால் ஒரு பிடி உழுந்து , அரிசி , கடலைப் பருப்பு , கச்சான் முத்து என்பவற்றை வறுத்து சேர்த்துக் கொள்ளலாம் .
யாழ் சமையல்