செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் செட்டிநாடு பட்டாணி குருமா

செட்டிநாடு பட்டாணி குருமா

2 minutes read

தேவையான பொருட்கள்:

தேங்காய் மசாலாவிற்கு…

  • எண்ணெய் – 1 டீஸ்பூன்

புதினா தொக்குபுதினா தொக்கு

  • பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
  • கசகசா – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்

பெப்பர் சிக்கன் ட்ரை பெப்பர் சிக்கன் ட்ரை

  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • பட்டை – 1 இன்ச்
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 1
  • துருவிய தேங்காய் – 1/2 கஙப
  • பூண்டு – 5 பல்
  • இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

பிற பொருட்கள்…

  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • சின்ன வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • புளி நீர் – 1/2 கப்
  • பச்சை பட்டாணி – 1 கப்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

  • முதலில் தேங்காய் மசாலாவைத் தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பொட்டுக்கடலை, கசகசா, கிராம்பு, பட்டை, சோம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு சில நொடிகள் வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
  • பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு அத்துடன் மிளகாய் தூளையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பட்டாணியைப் போட்டு, சிறிது உப்பு மற்றும் அரை கப் நீரை ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, கறிவேப்பிலை, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா, வேக வைத்துள்ள பட்டாணி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அத்துடன் புளி நீர் மற்றும் குருமா பதத்திற்கு தேவையான அளவு நீரையும் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு பட்டாணி குருமா தயார்.

நன்றி | Tamilbeauty.tips

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More