0
தேவையான பொருட்கள்:
- ஆட்டு மூளை – 1
- சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)
- பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- கொத்தமல்லி – சிறிது
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
- மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
- கசகசா – 1 டீஸ்பூன்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- வரமிளகாய் – 1
தாளிப்பதற்கு…
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- பட்டை – 1 துண்டு
- கிராம்பு – 1
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
- முதலில் ஆட்டு மூளையை நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும். பின் மூளையில் உள்ள சிவப்பு நரம்புகளை நீக்கிவிட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, மீண்டும் நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
- பின்பு மூளையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- இப்போது மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- அடுத்து நறுக்கி வைத்துள்ள மூளையை போட்டு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
- பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1/4 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். மசாலாவில் பச்சை வாசனை போனதும், அதேப் போல் நீர் வற்றியதும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல் தயார்.
குறிப்பு:
- ஆட்டு மூளை வேகமாக வெந்துவிடும். எனவே நீண்ட நேரம் வேக வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
- ஆட்டு மூளை மிகவும் மென்மையாக இருப்பதால், சமைக்கும் போது பார்த்து கையாளுங்கள்.
- மேலே மிதமான அளவில் தான் காரம் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு காரமாக வேண்டுமானால், 2 வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றி | Tamilbeauty